விஜே சித்து குழுவினரின் பாராட்டுகளைப் பெற்ற ஹைக்கு திரைப்படம்: அக்டோபர் 23 உலகமெங்கும் ரிலீஸ்!

விஜே சித்து குழுவினரின் பாராட்டுகளைப் பெற்ற ஹைக்கு திரைப்படம்: அக்டோபர் 23 உலகமெங்கும் ரிலீஸ்!

இளைஞர்களின் இதயங்களைக் கவரும் காதல் திரைப்படமாக உருவாகியுள்ள ஹைக்கு திரைப்படத்தை வி.ஜே. சித்து குழுவினர் பார்த்து தங்களின் உற்சாகமான பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த குழுவினர் அனைவரும் சிரிப்பும் நேர்மறை கருத்துகளுமாக தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சித்து குமார் மனதை வருடும் இசையமைத்துள்ளார். பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. காதல் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்