திருச்சியில் 'ஹைகூ' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'ஹைகூ' திரைப்படத்திற்கு திருச்சியில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதாகத் திரைப்பட ஆர்வலர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் திரையரங்குகளில் திரண்டு படத்தைக் கொண்டாடி வரும் வீடியோக்களும் தகவல்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. யுவராஜ் சின்னசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்து குமாரின் மனதை வருடும் இசையும், பிரியேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தின் உணர்ச்சிகரமான காதல்கதைக்கு கூடுதல் மெருகூட்டியுள்ளன. தமிழகத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் நேர்மறையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் 'ஹைகூ' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், அடுத்து வரும் வாரங்களிலும் திரையரங்கு காட்சிகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Actor Kayal Devaraj