ஹைகூ படத்தின் எப்பா ஏசப்பா வீடியோ பாடல் வெளியானது: அக்டோபர் 23ல் உலகளவில் ரிலீஸ்

ஹைகூ படத்தின் எப்பா ஏசப்பா வீடியோ பாடல் வெளியானது: அக்டோபர் 23ல் உலகளவில் ரிலீஸ்

யுவராஜ் சின்னசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹைகூ' திரைப்படத்தின் அதிரடியான 'எப்பா ஏசப்பா' வீடியோ பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது. சித்து குமார் இசையில் துள்ளலான பீட்களுடன் உருவாகியுள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களில் நல்ல வைப் தந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. துடிப்பான இளமைக்கதை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஹைகூ திரைப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்