திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் 'ஹைக்கூ': புக்மைஷோவில் 9.2 ரேட்டிங் பெற்று சாதனை!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் 'ஹைக்கூ': புக்மைஷோவில் 9.2 ரேட்டிங் பெற்று சாதனை!

நடிகர் ஏகன் மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படமான 'ஹைக்கூ' ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. புக்மைஷோ தளத்தில் பொதுமக்களின் மதிப்பீட்டில் 9.2 ரேட்டிங் பெற்றுள்ள தகவலை கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ள இப்படம், மனித உணர்வுகளையும் மென்மையான உறவுகளையும் அழகாகப் பேசியுள்ளதாகப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சித்து குமாரின் பின்னணி இசையும் பிரியேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வாய்மொழிப் பாராட்டு காரணமாக காட்சி எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்