தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழ் பெற்றது 'ஹைக்கூ': அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்கு ரிலீஸ்!

தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழ் பெற்றது 'ஹைக்கூ': அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்கு ரிலீஸ்!

காதல், நட்பு மற்றும் குடும்ப உறவுகளின் அழகிய தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படம் தணிக்கைக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு 'U/A' சான்றிதழ் பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, பிரியேஷ் ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்துள்ளார். தமிழகத்தில் இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிடுகிறது. காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இனிமையான காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள 'ஹைக்கூ', தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரைக்கு வரவுள்ளது சினிமா ரசிகர்களிடையே நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்