இளசுகளைக் கவரும் ஹைக்கூ: ரசிகர்களின் பாராட்டைப் பெறும் புதிய தலைமுறை காதல் கதை!
திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஹைக்கூ திரைப்படத்திற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கிடைத்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நவீன தலைமுறை காதலை யதார்த்தமாகப் பேசியுள்ள இப்படம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இன்றைய தலைமுறையின் உணர்வுகளையும் குழப்பங்களையும் அழகிய காதல் பின்னணியில் இப்படம் நேர்த்தியாக விவரித்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தமிழக திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஹைக்கூ திரைப்படம், திரையரங்கு ஓட்டத்திற்குப் பிறகு பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட காதல் திரைப்படங்களை விரும்புவோர் திரையரங்குகளில் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
· Idiamondbabu