திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டைப் பெறும் 'ஹைக்கூ': நேர்மறை விமர்சனங்களுடன் வெற்றி நடை!

திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டைப் பெறும் 'ஹைக்கூ': நேர்மறை விமர்சனங்களுடன் வெற்றி நடை!

நடிகர் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஹைக்கூ' (Haiku) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்திற்கு கிடைத்து வரும் பேராதரவுக்கு படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சித்து இசையமைத்துள்ளார். மனித மனங்களின் மென்மையான உணர்வுகளையும் நட்பையும் கவித்துவமாக வெளிப்படுத்திய விதம் சினிமா ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. பிரியேஷ் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் அழகூட்டியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு தமிழ் திரையுலகில் ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் குடும்பங்களோடு திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்