காதல் கதையாக மலரும் 'ஹைக்கூ': அக்டோபர் 23 உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!
இளைஞர்களின் காதல் மற்றும் உணர்வுகளைப் பேசும் புதிய திரைப்படமான 'ஹைக்கூ' (Haiku) வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் வண்ணமயமான போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் மனதை வருடும் இனிமையான பாடல்களை இசையமைக்க, பிரியேஷ் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரணயம், பிரேமா, காதல் ஆகிய மூன்று மொழிகளின் காதல் உணர்வுகளையும் அழகாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹைக்கூ திரைப்படம் இளசுகளின் மனதைக் கவரும் ஃபீல்குட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Idiamondbabu