ஹைகூ திரைப்படம் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்

ஹைகூ திரைப்படம் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்

இளமை துள்ளும் காதல் கதையம்சம் கொண்ட புதிய திரைப்படமான ஹைகூ வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு உற்சாகமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை திறமைமிகு இயக்குனர் யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தை தமிழகத்தில் முன்னணி வெளியீட்டு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி திரையரங்குகளில் வெளியிடுகிறது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் தளம் கைப்பற்றியுள்ளது. படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது படுவேகமாகத் தொடங்கியுள்ள நிலையில், காதல், நட்பு மற்றும் எதார்த்தமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களைக் கவரும் பாடல்களும் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாத வெளியீட்டில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு விருந்தாக இப்படம் அமையும்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்