திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் ஹைகூ திரைப்படம்

திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் ஹைகூ திரைப்படம்

தமிழ் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ள 'ஹைகூ' திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு வெளிவரும் பார்வையாளர்கள் அளிக்கும் உற்சாகமான விமர்சனங்கள் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். சித்து குமாரின் மனதை வருடும் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. இளமை ததும்பும் காதல் மற்றும் எமோஷனல் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வரும் 'ஹைகூ', இந்த வார இறுதி நாட்களிலும் நல்ல வசூலைப் பெறும் என்று விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்