திரையரங்குகளில் மனங்களை வெல்லும் 'ஹைக்கூ': பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றி நடைபோடும் ஃபீல்-குட் திரைப்படம்!

திரையரங்குகளில் மனங்களை வெல்லும் 'ஹைக்கூ': பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றி நடைபோடும் ஃபீல்-குட் திரைப்படம்!

இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஹைக்கூ' (Haiku) திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த ஃபீல்-குட் திரைப்படம் நல்ல விமர்சனங்களை குவித்து வருகிறது. சித்தூ குமாரின் மனதை வருடும் பின்னணி இசையும், பிரியேஷின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் எமோஷனல் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. மனித உறவுகளின் ஆழமான பாசத்தையும் காதலையும் எளிய மனிதர்களின் வாழ்க்கையூடாகப் பேசியுள்ள விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது. புக்மைஷோ தளத்தில் 9.2 என்ற மிக உயர் மதிப்பீட்டைப் பெற்றுள்ள இப்படம், வார இறுதி நாட்களில் குடும்பங்கள் ரசிக்கும் படமாக மாறியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் இதன் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ள போதிலும், திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்கும் அனுபவமே அலாதியானது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்