ஹைக்கூ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு: அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது!

ஹைக்கூ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு: அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது!

நடிகர் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் பெமினா ஜார்ஜ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இத்தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு அழகிய கதை உண்டு என்ற முழக்கத்துடன் ஒரு ஃபீல்-குட் பயணக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது கூடுதல் சிறப்பாகும். இப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நாளை வெளியாகும் டிரெய்லர் படத்தின் கதையம்சம் குறித்த கூடுதல் ஆவலை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்