திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றி நடைபோடும் 'ஹைக்கூ': ரசிகர்களுக்கு படக்குழு நன்றி!

திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றி நடைபோடும் 'ஹைக்கூ': ரசிகர்களுக்கு படக்குழு நன்றி!

நடிகர் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் நடிப்பில் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் வெளியான 'ஹைக்கூ' திரைப்படம் இந்த வார இறுதியில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். மனித உறவுகளையும் தூய்மையான காதலையும் மையமாகக் கொண்டு எதார்த்தமான முறையில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், ரசிகர்களின் மனங்களை வென்று நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சித்து குமாரின் மனதை வருடும் இசையும் பிரியேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் தமிழகமெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தரமான கதையம்சத்துடன் வெளியாகும் சிறு பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்பதை 'ஹைக்கூ' மீண்டும் நிரூபித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்