3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெறும் ஹைந்தவா டீசர்!
தெலுங்கு திரையுலகில் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் ஹைந்தவா (Haindava) படத்தின் டீசர், வெளியான குறுகிய நேரத்திலேயே இணையத்தில் 3 மில்லியன் டிஜிட்டல் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. டீசருக்குக் கிடைத்து வரும் இந்த அமோக வரவேற்பை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், மிரட்டலான பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் இந்த டீசர் அமைந்துள்ளது. கதாநாயகனின் கம்பீரமான தோற்றமும், ஆக்ஷன் காட்சிகளில் அவரது அதிரடி வேகமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் மேக்கிங் தரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. டீசருக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த சிங்கிள் பாடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டுத் தேதிகளைப் படக்குழுவினர் விரைவில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படம் பிரம்மாண்டமாக வெள்ளித்திரைக்கு வரவுள்ளது.
· Ursvamsishekar