அமல் நீரத்தின் பேச்சிலர் பார்ட்டி டியூ: கரோல் கதாபாத்திரத்தில் ஹன்சிகா கிருஷ்ணா
மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் பேச்சிலர் பார்ட்டி டியூ திரைப்படத்தின் அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுக சுவரொட்டிகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா கிருஷ்ணா, கரோல் என்ற சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சோனி மியூசிக் சவுத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், நஸ்ரியா ஃபஹத், நஸ்லென், சௌபின் ஷாஹிர், ஷைன் டாம் சாக்கோ என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான கதாபாத்திர வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள புதிய சுவரொட்டியில் ஹன்சிகா கிருஷ்ணாவின் தோற்றம் தனித்துவமாகவும் வசீகரமாகவும் அமைந்துள்ளது. நட்சத்திரங்களின் சங்கமமாக உருவாகும் இந்த முழுநீள ஆக்ஷன் திரைப்படத்தின் மீது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் இணையத்தில் வரவுள்ளன.
· Sony Music South