நீப் கரோலி பாபாவின் வாழ்க்கை வரலாறு: தெலுங்கில் அக்டோபர் 9ல் வெளியாகும் 'ஹனுமான் அன்ஷ்'!

நீப் கரோலி பாபாவின் வாழ்க்கை வரலாறு: தெலுங்கில் அக்டோபர் 9ல் வெளியாகும் 'ஹனுமான் அன்ஷ்'!

ஆன்மீக வழிகாட்டியான நீப் கரோலி பாபாவின் தெய்வீகப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'ஹனுமான் அன்ஷ்' (Hanuman Ansh) திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுவதும் தெலுங்கு மொழியில் வெளியாகிறது. உலகளவில் எண்ணற்ற பக்தர்களையும் பின்பற்றுபவர்களையும் கொண்டுள்ள நீப் கரோலி பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகள், அற்புதம் நிறைந்த தருணங்கள் மற்றும் ஆன்மீக போதனைகளைத் திரையில் கொண்டுவரும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. பக்தியையும் மன அமைதியையும் தரும் விதமாக இதன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆன்மீக திரைப்படங்களுக்கு தென்னிந்தியாவில் எப்போதும் ஒரு சிறப்பான வரவேற்பு இருக்கும் சூழலில், திரையரங்குகளில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தெலுங்கு பதிப்பில் இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்