திரையரங்குகளில் வரவேற்பு பெறும் பக்தி திரைப்படம் 'ஹனுமான் அம்ஷ்': முன்பதிவு தீவிரம்

திரையரங்குகளில் வரவேற்பு பெறும் பக்தி திரைப்படம் 'ஹனுமான் அம்ஷ்': முன்பதிவு தீவிரம்

பக்தி மற்றும் சாகச பின்னணியில் ஸ்வாம்பு மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள ஆன்மிக திரைப்படம் 'ஹனுமான் அம்ஷ்'. ஷோபினாவ் சத்யா இயக்கத்தில் விஹான் ஷெட்ஜ், சந்தன் ஆனந்த், பூர்ணிமா திவாரி மற்றும் குல்ஷன் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தற்போது பல நகரங்களில் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. குடும்பங்கள் மற்றும் ஆன்மிக விரும்பிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று வரும் இப்படத்தின் திரையரங்கு காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை முன்னெடுத்துள்ளது. முன்னணி நகரங்களில் உள்ள பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தி பரவசமூட்டும் காட்சிகள் மற்றும் நேர்த்தியான காட்சி அமைப்புகள் காரணமாக பார்வையாளர்களிடையே படத்திற்கு நல்ல வாய்மொழி விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. வார இறுதி நாட்களில் கூடுதல் திரையரங்குகளில் காட்சிகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

· Apifilms

பழைய செய்திகள்