ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியீட்டில் இன்று தெலுங்கில் திரைக்கு வந்தது ‘ஹனுமான் அன்ஷ்’!
கேஜிஎஃப், காந்தாரா படங்களின் தயாரிப்பு நிறுவனமான புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியீட்டில் உருவாகியுள்ள ஆன்மிக திரைப்படமான ‘ஹனுமான் அன்ஷ்’ (Hanuman Ansh) இன்று முதல் தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என பிரபல தெலுங்கு சினிமா மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஷால் சதுர்வேதி இயக்கத்தில் சுவாம்பு மீடியா நெட்வொர்க் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், புகழ்பெற்ற ஆன்மிக குரு நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படைப்பாகும். வடஇந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் தென்னிந்திய வெளியீட்டு உரிமைகளை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. அதன் ஒரு பகுதியாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு டப்பிங் பதிப்பு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ஆன்மிக கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தெலுங்கு திரையுலகில் வெளியாகி இருக்கும் இப்படம், வார இறுதி நாட்களில் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar