அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஹனுமான் அன்ஷ்: பிரம்மாண்ட தியேட்டர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஹனுமான் அன்ஷ்: பிரம்மாண்ட தியேட்டர் பட்டியல் வெளியீடு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஹனுமான் அன்ஷ்' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு, அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா முழுவதுமான திரையரங்குகளின் விரிவான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியீட்டில் உருவாகியுள்ள இப்படம், தனது மிரட்டலான டீசர் மற்றும் போஸ்டர்கள் மூலம் தொடக்கம் முதலே பெரும் கவனத்தை ஈர்த்து வந்தது. தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே இப்படத்தைக் காண பெரும் ஆர்வம் எழுந்துள்ளதால் மிகப்பெரிய அளவில் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பக்தி, ஃபேண்டஸி மற்றும் பிரம்மாண்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் கூடிய இப்படம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸில் புதிய வசூல் சாதனை படைக்கும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்