கேரளாவில் தனிப்பெரும் சாதனை படைத்த ரெபல் ஸ்டார்: பிரபாஸ் பிறந்தநாள் சிறப்பு பார்வை!
மலையாள சினிமா இணையதளமான மலையாளம் ரிவ்யூ தனது எக்ஸ் தளத்தில் பான் இந்தியா நாயகன் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்புப் பதிவை வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அதில், கேரள பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸ் படைத்துள்ள வரலாற்று சாதனைகள் நினைவுகூரப்பட்டுள்ளன. தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். கேரளாவில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்த 4 படங்களைக் கொடுத்துள்ள ஒரே தெலுங்கு கதாநாயகன் என்ற பெருமை பிரபாஸுக்கு மட்டுமே உண்டு. மேலும் கேரளாவில் அதிக வசூல் செய்த முதல் மற்றும் இரண்டாவது தெலுங்கு திரைப்படங்கள் இரண்டுமே பிரபாஸின் பெயரிலேயே உள்ளன. ரெபல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து கல்கி 2, ஸ்பிரிட் என பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரபாஸுக்கு இந்த ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாக அமைய ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· MalayalamReview