ஹர்பஜன் சிங், அர்ஜுனின் 'ஃப்ரெண்ட்ஷிப்': வைரலாகும் படப்பிடிப்புத் தள புகைப்படங்கள்!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படங்களை பி.ஆர்.ஓ சதீஷ் பகிர்ந்துள்ளார். ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். நடிகர் சதீஷ் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். கல்லூரி பின்னணியில் நட்பு மற்றும் சமூக நீதியை மையமாகக் கொண்ட கதையில் ஹர்பஜன் சிங் ஆக்ஷன் மற்றும் நடனக் காட்சிகளில் உற்சாகமாக நடித்துள்ளதாக படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
· Prosathish