ஹரீஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்: தீபாவளிக்கு நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸ்!
இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி நடிப்பில் உருவான காதல் காவியமான நூறு கோடி வானவில் திரைப்படம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற உணர்வுபூர்வமான வெற்றிப் படங்களை இயக்கிய சசி, இப்படத்திலும் மனதைத் தொடும் குடும்ப மற்றும் காதல் கதையைக் கையாண்டுள்ளார். தமிழில் சித்தி இத்னானியின் முதல் திரைப்படமாகத் தொடங்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. தீபாவளி விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கும் விதமாக ஜீ5 தளத்தில் வெளியாகும் நூறு கோடி வானவில் திரைப்படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
· @_movietamil