ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது ஹாரி பாட்டர் முதல் பாகம்: மீண்டும் தொடங்கும் மாயாஜால உலகம்!
உலக சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட ஹாரி பாட்டர் அண்ட் தி சோசரேர்ஸ் ஸ்டோன் திரைப்படம், தற்போது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எச்பிஓ மேக்ஸ் (HBO Max) உடனான ஒப்பந்தத்தின் கீழ் ஜியோஹாட்ஸ்டாரில் ஹாரி பாட்டர் திரைப்பட வரிசை ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ஜே.கே. ரௌலிங்கின் உலகப் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், 2000-களின் தொடக்கத்தில் உலகளவில் வெளியான போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டது. டேனியல் ராட்க்ளிஃப், எம்மா வாட்சன், ரூபர்ட் கிரின்ட் ஆகியோரின் குழந்தைப் பருவ நடிப்பை மீண்டும் திரையில் கண்டு ரசிக்க இது அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்க ஏற்ற திரைப்படமாக இது அமைந்துள்ளதால், ஓடிடி பிரியர்கள் மற்றும் ஹாரி பாட்டர் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
· Jiohotstar