'ரோமியோ ஜூலியட்' படத்திலிருந்து சாரி பேபி பாடல் வெளியீடு: நாயகன் ஹர்ஷித் ரெட்டி உற்சாக பேச்சு!
நடிகர் ஹர்ஷித் ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள புதிய தெலுங்குத் திரைப்படமான 'ரோமியோ ஜூலியட்' (Romeo Juliet) படத்தின் 'சாரி பேபி' (Sorry Baby) பாடல் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நாயகன் ஹர்ஷித் ரெட்டி படத்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், படத்தில் உள்ள புதுமையான உணர்வுப்பூர்வமான காட்சிகளும் பாடல்களும் இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நவரசா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் விஷாகா திமான் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுள்ளன. வரும் நவம்பர் 13ஆம் தேதி 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாடல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. புதிய படைப்பாளர்களின் இந்த முயற்சிக்கு சினிமா ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
· Ursvamsishekar