நெசவுத் தறியின் பின்னணியில் காதல்: 'ஹைட் அண்ட் சில்க்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ வெளியானது!

நெசவுத் தறியின் பின்னணியில் காதல்: 'ஹைட் அண்ட் சில்க்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ வெளியானது!

கார்த்திகேயன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹைட் அண்ட் சில்க்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. நெசவுத் தொழிலின் பின்னணியில் மலரும் அழகிய காதல் கதையாக உருவாகும் இந்த புதிய படத்தின் சுவாரசிய தகவல்களை கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் திறமைவாய்ந்த இளம் நடிகர் சுஹாஸ் மற்றும் சஞ்சனா முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தனிகெல்லா பரணி, கருணாகரன், நந்து உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். ராஜேந்திர பாலா இயக்கியுள்ள இந்த படத்திற்கு அம்ரித் ராம்நாத் மனதை மயக்கும் துள்ளலான இசையமைத்துள்ளார். காதல் இழையோடும் வண்ணமயமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நேர்த்தியான பாரம்பரிய நெசவுப் பின்னணியில் புனையப்பட்டுள்ள இக்காதல் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் முழுமையான டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்