30 லட்சம் பார்வைகளைக் கடந்த ஹைட் அண்ட் சில்க் டைட்டில் ப்ரோமோ: தமிழ் தெலுங்கில் சுஹாஸ் அசத்தல்
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் சுஹாஸ் நடிப்பில் உருவாகி வரும் இருமொழி திரைப்படமான 'ஹைட் அண்ட் சில்க்' டைட்டில் ப்ரோமோ, இணைய தளங்கள் அனைத்திலும் சேர்த்து 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த ப்ரோமோ ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. ராஜேந்திர பாலா இயக்கியுள்ள இந்த கலகலப்பான படத்தில் சுஹாஸுடன் சஞ்சனா, தணிகேள பரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்தியாசமான டைட்டில் கான்செப்ட் ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியுள்ளது. கார்த்திகேயன் எஸ் மற்றும் வர்திகா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சமூக வலைத்தளங்களில் கிடைத்து வரும் தொடர் வரவேற்பு, படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த டீசர் மற்றும் ரிலீஸ் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
· Actor Kayal Devaraj