'லிப்ஸ்டிக் லாவண்யா' ஸ்டெப் இணையத்தில் வைரல்: 'ஹை' படத்தின் 'தம்முலுண்டே' பாடல் வெளியீடு!
எஸ். கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஹை' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'தம்முலுண்டே' யூடியூபில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள 'லிப்ஸ்டிக் லாவண்யா' கவர்ச்சி நடன அசைவுகள் மற்றும் துள்ளலான இசை இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீல்ஸ் ட்ரெண்டாக மாறியுள்ளது. துடிப்பான தாளத்துடன் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு நடனக் கலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது சொந்த நடன வீடியோக்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஹரிஷ் பெத்தி தயாரிப்பில் இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் இப்படத்தில் நகைச்சுவையும் காதல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு சுவாரசியமான படைப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த சுவாரசியமான விளம்பர பணிகளையும் புதிய பாடல்களையும் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
· Ursvamsishekar