நவம்பர் 27 அன்று தியேட்டர்களில் ரிலீஸ்: புதிய போஸ்டருடன் உற்சாக வாழ்த்து சொன்ன 'ஹை' படக்குழு!
புதிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ஹை' படக்குழுவினர், விஜயதசமி திருநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பிஆர்ஓ வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், படம் வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்கா தேவியின் தெய்வீக சக்தியையும், அதர்மத்தை தர்மம் வெல்லும் கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த புதிய போஸ்டர் சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள், அனல் பறக்கும் சண்டை அமைப்புகள் மற்றும் பரபரப்பான திரைக்கதையுடன் இப்படம் தயாராகி வருவதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த நவம்பர் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் 'ஹை' திரைப்படம், ஆக்ஷன் சினிமா ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான தியேட்டர் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுக்கான பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
· Ursvamsishekar