ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் ஹெச்ஹெச்டி 7: வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஏழாவது திரைப்படமான 'ஹெச்ஹெச்டி 7' திரைப்படத்தை தாங்கள் பெருமையுடன் தயாரிப்பதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆதியே இசையமைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தை இயக்கிய திறமையான இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்குகிறார். இளைஞர்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் குடும்பப் பார்வையாளர்களையும் ஈர்க்கும் விதமாக, நகைச்சுவையும் சிறந்த சமூகக் கருத்தும் கலந்த எளிய கதையமைப்பில் இப்படம் செதுக்கப்பட்டு வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வழக்கமான அதிரடி துள்ளலிசைப் பாடல்களும் நேர்மறையான இளைஞர் பட்டாளக் கதைகளும் இப்படத்திலும் தவறாமல் இடம்பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் தீவிரமாகத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் கதாநாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
· VelsFilmIntl