மீசைய முறுக்கு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: செப்டம்பர் 25 முதல் கொண்டாட்டம் ஆரம்பம்

மீசைய முறுக்கு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: செப்டம்பர் 25 முதல் கொண்டாட்டம் ஆரம்பம்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் நீண்ட நாள் ஆவலுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று ஒரு கொண்டாட்டப் படமாக அமைந்தது. கல்லூரி வாழ்க்கை, நட்பு, இசை லட்சியம் மற்றும் காதல் என அனைத்தும் கலந்த படமாக அமைந்ததன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாம் பாகமும் அதே துள்ளலுடன் உருவாகியுள்ளது. இளமை துள்ளும் பாடல்கள் மற்றும் ஹிப்ஹாப் ஆதியின் வழக்கமான சுறுசுறுப்பான கலகலப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள மீசைய முறுக்கு 2, தியேட்டர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மீண்டும் ஒரு இசை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Prosathish

பழைய செய்திகள்