ஹோம்பாலே பிலிம்ஸின் புதிய படைப்பு: 'சரணாகதி' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
கேஜிஎஃப் மற்றும் காந்தாரா ஆகிய பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் 'சரணாகதி' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. கிரிஷ் காரிகிரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஆன்மீகமும் உணர்வும் கலந்த முன்னோட்டத்தை நடிகர் கயல் தேவராஜ் பகிர்ந்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுடன் உருவாகும் இத்திரைப்படம், பக்தி மற்றும் மனித வாழ்வின் ஆழமான தேடலை மையமாகக் கொண்டுள்ளதை டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் உணர்த்துகின்றன. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் உயர்தர தயாரிப்பு உழைப்பு டீசரின் ஒவ்வொரு பிரேமிலும் பளிச்சிடுகிறது. வித்தியாசமான களங்களை தனித்துவமான தரத்தில் வழங்கி வரும் ஹோம்பாலே பிலிம்ஸின் இந்த புதிய முயற்சி சினிமா ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அடுத்த கட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj