ஓம் படத்திற்குள் மம்மூட்டி வந்தது எப்படி? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விவரித்த கதை
தனுஷ் தயாரித்து நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி இணைந்தது எப்படி என்பது குறித்த ஆச்சரியமூட்டும் தகவலை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார். மூவி தமிழ் வெளியிட்டுள்ள பேட்டியில் இந்த ருசிகர பின்னணி வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மம்மூட்டிக்கு கதையின் சுருக்கத்தை அனுப்பியதாகவும், அதைப்படித்த அடுத்த இருபது நிமிடங்களிலேயே மம்மூட்டி தனக்கு கதை மிகவும் பிடித்துள்ளதாகப் பதிலளித்ததாகவும் இயக்குநர் கூறியுள்ளார். எனினும் அப்போது அவர் நடிப்பிலிருந்து சிறிய இடைவெளி எடுத்திருந்ததால், முழு கதையையும் நான்கு மாதங்களுக்குப் பிறகே நேரில் கேட்டறிந்து உடனே நடிக்க சம்மதித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் இரு பெரும் ஆளுமைகளான தனுஷும் மம்மூட்டியும் திரையில் மோதும் காட்சிகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் இப்போதே கோலிவுட் ரசிகர்களிடம் பற்றிக்கொண்டுள்ளது.
· @_movietamil