ஹிருதயம் படத்தின் தர்ஷனா பாடல் வெளியானது: கல்லூரி இளைஞர்களைக் கவர்ந்த காதல் மெலடி
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமான 'ஹிருதயம்' படத்தின் முதல் பாடலான 'தர்ஷனா' அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மெரிலாண்ட் சினிமாஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். துடிப்பான கல்லூரிப் பருவத்துக் காதலைப் பிரதிபலிக்கும் வகையில் உருவான இந்தப் பாடல் வெளியானது முதலே இளைஞர்களின் காலர் டியூனாகவும் சமூக வலைதள ரீல்ஸ்களிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் 2022 ஜனவரியில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சின்க் சினிமா இப்படத்திற்கான ஒலியமைப்பை மேற்கொண்டுள்ளது. பாடலின் மகத்தான வெற்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.
· Synccinema