ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் 'ஹுங்கார் தி ரோர்': கவனம் பெறும் நீதிமன்ற வசனம்
ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புதிதாக வெளியாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரான 'ஹுங்கார்: தி ரோர்' சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. இத்தொடரில் வழக்கறிஞர் பலேராவ் பேசும் காரசாரமான நீதிமன்ற வசனக் காட்சியை ஜியோஹாட்ஸ்டார் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. நித்யா மெஹ்ரா மற்றும் கரண் டி. கபாடியா இணைந்து உருவாக்கியுள்ள இந்த 6 எபிசோட் கோர்ட்ரூம் டிராமா தொடரில், அதிகாரம் படைத்த சாமியாருக்கு எதிராக ஒரு பள்ளி மாணவி தொடுக்கும் துணிச்சலான பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகிறது. வழக்கறிஞர் பலேராவ் கதாபாத்திரத்தில் முகமது ஜீஷன் அய்யூப் நடித்துள்ளதோடு, காவல்துறை அதிகாரியாக பாத்திமா சனா ஷேக் மற்றும் அனீத் பட்டா உள்ளிட்ட பலர் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சந்திக்கும் சவால்களைப் பேசும் இந்த விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ், ஓடிடி பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
· Jiohotstar