'ஹுங்கார்: தி ரோர்' தொடர்: ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தொடக்கம்!

'ஹுங்கார்: தி ரோர்' தொடர்: ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தொடக்கம்!

நீதிக்கான போராட்டத்தையும் குற்றப் பின்னணியையும் மையமாகக் கொண்டு உருவான 'ஹுங்கார்: தி ரோர்' (Hunkkaar: The Roar) இணையத் தொடர் தற்போது ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. பிரபல ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இத்தொடர் குறித்துச் சமூக அக்கறை கொண்ட முக்கியப் பதிவொன்றைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூகத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை விடப் பாதிக்கப்பட்டவரைக் குறை சொல்லும் போக்கை அழுத்தமாகச் சாடும் இந்த நீதிமன்ற நாடகத் தொடர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. பதின்ம வயது மாணவி ஒருவர் ஆன்மிகத் தலைவர் மீது சுமத்தும் பாலியல் குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலும் சமூகத்திலும் வெடிக்கும் உண்மைக்கான போராட்டமுமே இதன் கதைக்களம். பாத்திமா சனா ஷேக், அனீத் பட்டா, அர்ஜுன் மாத்தூர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸ் குறித்துப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குடும்பத்துடன் அமர்ந்து விவாதிக்க வேண்டிய சமூகக் கருத்தை முன்வைக்கும் 'ஹுங்கார்: தி ரோர்' ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடர், தற்போது ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் சந்தாதாரர்களின் பார்வைக்குக் கிடைக்கிறது.

· Jiohotstar

பழைய செய்திகள்