ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் 'ஹுங்கார் தி ரோர்': தொடர் ஸ்ட்ரீமிங் தொடக்கம்!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட வெப் தொடரான 'ஹுங்கார்: தி ரோர்' (Hunkkaar: The Roar) தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கான உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் சமூகத்தில் உள்ள தடைகளை உடைத்து எழும் ஒரு பெண்ணின் வீரமிக்க போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. "இனி பின்வாங்கவும் பயப்படவும் இடமில்லை, ராணி பேட்டி தன் உரிமைக்காக கர்ஜிப்பாள்" என்ற அதிரடி வரிகளுடன் இதன் முன்னோட்டக் காட்சிகளை ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. கதாநாயகியின் அழுத்தமான நடிப்பும் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. பரபரப்பான திரைக்கதையுடன் சமூகப் பிரச்னைகளைப் பேசும் இத்தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் அனைத்து எபிசோடுகளுடனும் காணக் கிடைக்கிறது. க்ரைம் மற்றும் சமூக நாடக பாணி தொடர்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
· Jiohotstar