ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது 'ஹுங்கார் தி ரோர்' வெப் தொடர்: பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் அதிரடி படைப்பு!

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது 'ஹுங்கார் தி ரோர்' வெப் தொடர்: பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் அதிரடி படைப்பு!

டிஜிட்டல் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்: ஹுங்கார் தி ரோர்' (Hunkkaar - The Roar) புதிய வெப் தொடர் தற்போது ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ராவின் பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. பாத்திமா சனா ஷேக், முகமது ஜீஷன் அய்யூப், ரகுபீர் யாதவ், அர்ஜுன் மாத்தூர், ராம் கபூர், ராஜேஷ் சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இதில் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். அதிகார பலம் மற்றும் அதிரடி திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்தொடரின் வெளியீட்டை ஜியோஹாட்ஸ்டார் தளம் உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான அனுபவமாக இத்தொடர் அமைந்திருப்பதாக இணையத்தில் வரவேற்பு எழுந்துள்ளது.

· Jiohotstar

பழைய செய்திகள்