பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் ஹுங்கார் தி ரோர்: ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது விறுவிறுப்பான வெப் தொடர்!
பிரியங்கா சோப்ராவின் பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிர்லா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹுங்கார்: தி ரோர்' வெப் தொடர் தற்போது ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாத்திமா சனா ஷேக், ரகுபீர் யாதவ், முகமது ஜீஷன் அய்யூப், அர்ஜுன் மாத்தூர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் உரிமைப் போராட்டத்தையும், சமூகம் மற்றும் அதிகார அமைப்புகளுக்கு எதிரான அவளது சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வலுவான திரைக்கதையும் தேர்ந்த நடிகர்களின் நடிப்பும் இந்த தொடருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
· Jiohotstar