இளையராஜா இசையில் அபராஜித் பிலிம்ஸின் 3வது படம்: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு பணிகள்!

இளையராஜா இசையில் அபராஜித் பிலிம்ஸின் 3வது படம்: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு பணிகள்!

அபராஜித் பிலிம்ஸ் நிறுவனம் தனது 3வது தயாரிப்பாக உருவாக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை முறைப்படி நடைபெற்றுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா புகைப்படங்களையும் காணொளிகளையும் சினிமா ஆய்வாளர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மூத்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பாசறை கலைஞர்கள் மற்றும் பாரதன், பட்டணம் ரஷீத், வாஞ்சிநாதன் முருகேசன் உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர். சுவா மஹிமன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ராம் ராவ் படத்தொகுப்பு செய்கிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்புகளை கவனிக்கிறார். இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்தின் ஆன்மாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தெய்வீக ஆசியுடன் இனிதே தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முழுவீச்சில் ஆரம்பமாகவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தயாரிப்புத் தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்