'என்னை நினைத்துதான் பாரதிராஜா ஷாட் வைப்பார்': இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சியான நினைவுகள்!
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நட்பிற்கு உதாரணமாக விளங்கும் இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் திரையுலக பிணைப்பு குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. மூத்த சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் இத்தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக தினகரன் நாளிதழில் வெளியான கேள்வி பதில் பகுதியில், 'பாரதிராஜா படங்கள் என்றால் மட்டும் இவ்வளவு சிறப்பாக பின்னணி இசை அமைக்கிறீர்களே, அதன் ரகசியம் என்ன?' என்று வாசகர் ஒருவர் இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இளையராஜா, 'பாரதிராஜா படம் இயக்கும்போது நான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஷாட் வைப்பார். கிரவுண்டு கொடுத்தால்தானே விளையாட முடியும்?' என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரது கூட்டு முயற்சியில் வெளியான திரைப்படங்களும், அந்தப் படங்களில் இடம்பெற்ற காலத்தால் அழியாத பாடல்களும் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் போற்றப்படும் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய பதிவு இசை ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
· Actor Kayal Devaraj