இளையராஜாவின் இசையில் இந்தியாவின் ஆஸ்கர் நுழைவுப் படம் 'கோந்தல்': சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச சினிமா வட்டாரத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ள 'கோந்தல்' (Gondhal) திரைப்படக் குழுவினர் சென்னையில் சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், அழுத்தமான சமூகக் கதைக்களத்துடனும் தனித்துவமான உணர்வுப் பதிவுகளுடனும் உருவாகி சர்வதேச அளவில் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் படத்தின் முன்னணி நடிகர் யோகேஷ் சோஹோனி மற்றும் நடிகை இஷிதா தேஷ்முக் ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பு அனுபவங்களையும் இளையராஜாவின் இசை குறித்த தங்களின் வியப்பையும் மனந்திறந்து பகிர்ந்துகொண்டனர். இளையராஜாவின் ஆன்மார்த்தமான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய உயிர்நாடியாக அமைந்துள்ளது என்றும், சர்வதேச ஆஸ்கர் மேடைகளில் இப்படம் இந்திய சினிமாவுக்கு நிச்சயம் மிகப்பெரிய பெருமையைத் தேடித் தரும் என்றும் படக்குழுவினர் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.
· Actor Kayal Devaraj