அமேசான் பிரைமில் வெளியானது இளையராஜா இசையமைத்த 'லெனின் பாண்டியன்'

அமேசான் பிரைமில் வெளியானது இளையராஜா இசையமைத்த 'லெனின் பாண்டியன்'

இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் உருவாகியுள்ள சமூகநீதிக்கான திரைப்படமான 'லெனின் பாண்டியன்' தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. அடித்தட்டு மக்களின் உரிமைக்காகப் போராடும் நீதியின் குரலாக உருவாகியுள்ள இந்த உணர்வுப்பூர்வமான திரைப்படம் ஓடிடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிடிபி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கங்கை அமரன், ரோஜா செல்வமணி, தர்ஷன், ஸ்ரிதா ராவ், பாடகர் யுகேந்திரன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பல திறமையான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் நெஞ்சைத் தொடும் பாடல்களும், காட்சிகளுக்கு வலுசேர்க்கும் அழுத்தமான பின்னணி இசையும் இத்திரைப்படத்திற்கு மிகச்சிறந்த பலமாக அமைந்துள்ளன. எளிய மக்களின் உரிமைப் போராட்டங்களை நேர்மையாகப் பேசும் யதார்த்த சினிமாக்களை விரும்பும் பார்வையாளர்களுக்கு 'லெனின் பாண்டியன்' ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். தற்போது அமேசான் பிரைமில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில் இது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்