டி. ராஜேந்தர் இசையில் முதல்முறையாக பாடிய இளையராஜா: பாக்கியராஜின் கடைசிப் படம் கன்னடத்து பைங்கிளி!

டி. ராஜேந்தர் இசையில் முதல்முறையாக பாடிய இளையராஜா: பாக்கியராஜின் கடைசிப் படம் கன்னடத்து பைங்கிளி!

தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத அபூர்வ நிகழ்வாக, பன்முக வித்தகர் டி. ராஜேந்தர் இசையமைக்கும் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா முதல் முறையாக ஒரு பாடலைப் பாடியுள்ளார். சாய் ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக, சமீபத்தில் மறைந்த திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் நடித்த கடைசிப் படமாக இது அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து கணவன் மனைவியாகவே இப்படத்தில் நடித்துள்ளனர். டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே திரைப்படமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்க, சிங்கம் புலி, புகழ், ஆதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1990களில் ஓசூரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

· Nikil Murukan

பழைய செய்திகள்