இந்தியன் சினிமா கம்பெனியின் 4வது தயாரிப்பு பூஜை நிகழ்வுடன் தொடங்கியது: கிரிஷ் ஏ.டி கிளாப் அடித்தார்

இந்தியன் சினிமா கம்பெனியின் 4வது தயாரிப்பு பூஜை நிகழ்வுடன் தொடங்கியது: கிரிஷ் ஏ.டி கிளாப் அடித்தார்

'நரிவேட்டா' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியன் சினிமா கம்பெனி நிறுவனம் தனது 4-வது புதிய திரைப்படத் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இப்படத்தை திறமையான இயக்குனர் ரோஹித் சந்திரசேகர் இயக்க, கிரண் கே.எஸ் திரைக்கதை எழுதியுள்ளார். படப்பிடிப்பின் தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய பூஜை விழாவில் புகழ்பெற்ற மலையாள இயக்குனர்களான கிரிஷ் ஏ.டி மற்றும் டொமினிக் அருண் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிரபல இயக்குனர் கிரிஷ் ஏ.டி முதல் காட்சிக்கான கிளாப் போர்டை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தனித்துவமான மற்றும் தரமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் இந்தியன் சினிமா கம்பெனியின் இந்த புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

· MalayalamReview

பழைய செய்திகள்