இனிகோ நடிக்கும் க்ரைம் த்ரில்லர் 'மின்னும் ஓர் இரவு': நவம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்!
இனிகோ பிரபாகரன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள 'மின்னும் ஓர் இரவு' என்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் பி. ராபர்ட்ராஜ் மற்றும் லீலா எஸ்.பி. இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். விறுவிறுப்பான மர்மங்களும் புலனாய்வுத் திருப்பங்களும் நிறைந்த படமாக இது இருக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுரேஷ்குமார் சுந்தரம், எஸ்.என். பாசில், அஞ்சு அசோக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
· Actor Kayal Devaraj