பிக்பாஸ் குமரன் நடிக்கும் 'இறுதிப் பக்கம் வால்யூம் 2': வெளியானது மிரட்டலான டைட்டில் போஸ்டர்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற குமரன் தங்கராஜன், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 'இறுதிப் பக்கம் வால்யூம் 2: பிரெஷ் பிளட்' (Irudhi Pakkam Vol 2 Fresh Blood) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை திரை வட்டார பிரபலங்கள் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை மனோ எழுதி இயக்குகிறார். இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கஃபே நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் குமரனுடன் இணைந்து ஸ்மேகா மற்றும் நாடகக்காரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். க்ரைம் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை தொடர்ந்து, இரண்டாம் பாகம் புதிய நடிகர்களுடன் புதிய களத்தில் உருவாகி வருகிறது. டைட்டில் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ரத்தக் கறைகளும் பின்னணி வடிவமைப்பும் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தகட்ட டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj