விஜய் சேதுபதி வரிகளில் வெளியான 'இருவர்' இசை ஆல்பம்: அதிதி சங்கர் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா அசத்தல்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எழுதிய பாடல் வரிகளில் உருவான 'இருவர்' என்ற உணர்வுப்பூர்வமான சுயாதீன காதல் இசை ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் ஆதரவுடன் சரிகம சவுத் தளத்தில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் குமரன் இயக்கியுள்ள இந்த இசைப் பாடலுக்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து, நடிகை அதிதி சங்கருடன் இணைந்து திரையிலும் தோன்றியுள்ளார். சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி சங்கர் இருவரும் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். விஜய் சேதுபதியின் கவித்துவமான வரிகள் பாடலுக்கு தனி வசீகரத்தைச் சேர்த்துள்ளன. காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ள இந்த 'இருவர்' பாடல், இசை ஆர்வலர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
· Idiamondbabu