பட்ஜெட்டை மிச்சப்படுத்திய சுந்தர் சி: ஐசரி கணேஷ் பாராட்டு
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் மூக்குத்தி அம்மன் 2 முன் வெளியீட்டு விழாவில் பேசிய சுவாரசிய தகவல்களை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். வேல்ஸ் நிறுவனத்தின் 27வது தயாரிப்பாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2, தங்களின் முதல் பான் இந்தியா வெளியீடு என்று ஐசரி கணேஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார். இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்ட பட்ஜெட்டை விட குறைவான செலவிலேயே மிக பிரம்மாண்டமாக படத்தை முடித்துக் கொடுத்ததை அவர் பாராட்டினார். நடிகை நயன்தாரா முழு ஈடுபாட்டுடன் அம்மன் வேடத்தில் வாழ்ந்து நடித்துள்ளதாகவும், ரெஜினா மற்றும் யோகி பாபு சிறந்த நடிப்பை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு உரிமையை முன்னணி நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வரும் நவம்பர் 6 அன்று தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது.
· Actor Kayal Devaraj