யு/ஏ சான்றிதழுடன் சென்சாரில் பாஸ் ஆன 'இட்லு அர்ஜுனா': நவம்பர் 13ல் உலகமெங்கும் ரிலீஸ்!
தெலுங்கு திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் தணிக்கை குழுவின் பரிசீலனைக்கு பிறகு 'யு/ஏ' (U/A) சான்றிதழைப் பெற்றுள்ளது. சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை பார்த்துவிட்டு பிளாக்பஸ்டர் பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரபல மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தூய்மையான காதலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் நிறைந்த கதையம்சத்தோடு உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் நேர்த்தியாக இயக்கப்பட்டுள்ளது. காதல் கதைகளுக்கு தென்னிந்திய சினிமா பிரியர்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு என்ற நிலையில், இப்படத்தின் பாடல்களும் முன்னோட்ட காட்சிகளும் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வரும் நவம்பர் 13ஆம் தேதி 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. பட வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
· Ursvamsishekar