இட்லு அர்ஜுனா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: ரசிகர்கள் உற்சாகம்

இட்லு அர்ஜுனா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: ரசிகர்கள் உற்சாகம்

குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு தற்போது உலகம் முழுவதும் பரவலாகத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் தங்களது விருப்பமான திரையரங்குகளில் முன்கூட்டியே தங்களுக்கு பிடித்தமான இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுமாறு படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. காதல், நகைச்சுவை, சண்டை மற்றும் குடும்பப் பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், உணர்வுகளின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான திரைப்பயணமாக இருக்கும் என படக்குழுவினர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர். படத்தின் விளம்பரப் பாடல்களும் டிரைலரும் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நவம்பர் 13 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடும்ப பார்வையாளர்களின் தொடர் வருகையால் திரையரங்குகளில் நல்ல கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்